இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஏற்ற பருவத்தில், அவரவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு வாழ்கை துணை படைக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் பலருக்கு தக்க வயதில் திருமணம் நடைபெறுவது இல்லை. இந்த உலகத்தில் பிறந்த ஒவொருவருக்கும் உண்ண உணவு, இருக்க இடம், தகுந்த துணை அவர்கள் பிறக்கும் போதே இறைவனால் படைக்கப்படுகிறது என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்கள அடிக்கடி கூறுவார்.
நாளுக்கு நாள் இந்த சமூகத்தில் மக்களிடையே எதிர்பார்ப்புக்கள் அதிகமாகிவிட்டது. தன் தகுதிக்கு மீறி பேராசை பட ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் இயற்கைக்கு மாறாக நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.
திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், இயற்கையில் ஏற்படும் உடல் இச்சைகளை சமூகம் சார்ந்த ஒழுக்க நெறிகளுடன் தீர்த்து கொள்ளவும் தான் பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் திருமணத்தை வியாபார ரீதியாக பார்க்க ஆரம்பித்ததின் விளைவு இன்று நாற்பது வயதை தாண்டியும் சரியான துணை கிடைக்காமல் அவஸ்தைப்படும் சூழ்நிலை.
இயற்கைக்கு மாறாக என்றொரு வார்த்தையை நான் மேலே பயன்படுத்தி இருப்பேன். காரணம் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆனா, பெண்ணை என்று தெரிந்து பெண் குழந்தை என்றால் கருவிலேயே அழித்து விடும் மிகக் கேவலமான எண்ணங்களும், நடவடிக்கைகளும் மனிதனிடத்திலே மேலோங்கி விட்டது. இது படித்த வர்க்கத்தில் இப்படி என்றால், பாமரர்கள் மத்தியில் ஒரு படி மேலே போய், பிறந்த பெண்குழந்தையை கொன்று விடும் மிகப் பெரும் பாவச் செயலை செய்கிறார்கள். ஏதோ ஆண்மகன் மட்டும்தான் இவர்களை கடைசி வரை காப்பாற்றுவான் என்றும், இவர்கள் பேரரசை ஆண் மகன் மூலம் மட்டும் தான் ஆளமுடியும் என்றோரு நினைப்பு. இவனே பெற்றவர்களை நடுரோட்டில் விட்டுவிட்டு பெண்டாடியுடன் கூத்தடித்து கொண்டிருப்பான். இதில் இவனுக்கு ஆண்பிள்ளை தான் வேண்டுமாம். அயோக்கிய பயலைகள்.
கடந்த இருபது வருடங்களில் இந்த சூழ்நிலை அதிகமாகி விட, இப்பொழுது எங்குபார்த்தாலும் ஆண்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் திருமணம் செய்ய தகுந்த பெண்கள் இல்லை. இன்னொரு காரணமும் இருக்கிறது.
இது இப்படி இருக்க திருமண வயதில் இருக்கும் ஆண்களின் எதிர்பார்ப்புக்களோ கொஞ்சம் நஞ்சம் அல்ல. எப்படியாவது தன்னுடைய பேராசைகளையெலலம் மாமனாரை வைத்து நிறைவேற்றி விட வேண்டும் என்ற குறிக்கோளிலேயே பெண் தேடுகிறான். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். ஒரு SMS படித்தேன். சொந்தமா தொழில் தொடங்கனும்னா என்ன Law தெரிந்த்திருக்க வேண்டும் என்று? அதற்கு பதில் "Father in law” தெரிந்திருக்க வேண்டும் .
சராசரியாக இருபத்தைந்து வயதில் பெண் தேடும் ஒருவர் வரதட்சனையாக ஒரு லிஸ்டே வைத்திருப்பார். அதில் கார், வீடு, காடு, தோட்டம், தென்னைமரம், அதில் தேங்காய், தேங்காய் போட மூப்பன் என்று ஏகப்பட்டவை இருக்கும். அந்த லிஸ்டை வைத்துக் கொண்டு இருபத்து ஒன்பது வயது வரை பெண் தேடுவார்கள். ஒன்றும் கிடைக்காது.
இப்பொழுதெல்லாம் ஆண்கள் இருபத்தியெட்டு வயதை தாண்டும் போதே கிழடு தட்டி விடுகிறார்கள். அதிலும் கொள்ளை ஆசையுடன் திரியும் ஆண்களுக்கு சொல்லவே வேண்டாம். கண்ணமெல்லாம் டொக்கு விழுந்து நொந்துபோய் கிடப்பார்கள்.
இன்டர்நெட், சி டி பலான படம், சுயமாக செய்தல் என்று ஒரு ரவுண்ட் வந்து உடலில் உள்ள உயிர் சக்தியெல்லாம் குறைந்து, தோல் பளபளப்பு குறைந்து, மறதி, துக்கம் என உடல் மண்டி கிடக்கும், பொதுவாக பேராசை அதிகமானால் விரைவில் வயதான தோற்றம் வந்துவிடும்.
ஒருவழியாக வயது முப்பதை தாண்டியவுடன் தன்னுடைய லிஸ்டில் இருந்து எதிர்பார்புகளை கொஞ்சம் குறைத்து கொண்டு தேடுவார்கள். அப்படியும் கிடைக்காது,
வயது கிட்டத்தட்ட முப்பத்தைந்தை தாண்டி கொண்டிருக்கும். இப்பொழுது லிஸ்டை சுத்தமாக தூக்கி எரிந்து விட்டு எதோ அவர்களால் அவர்கள் பெண்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யட்டும். ஏற்று கொள்வோம். பெண் கிடைத்தால் சரி என்று தேடுவார்கள். அப்பொழுதும் கிடைக்காது.
வயது 37 யைம் தாண்டி விடும். டை அடிக்க கூட தலையில் மயிர் இல்லை. தாடி பூராவும் பெரியார் தாடி மாதிரி பளிச் சென்று இருக்கும். இப்ப என்ன செய்ய? உடனே எல்லா புரோக்கர்களையும் அழைத்து எந்த வரதட்சனையும் வேண்டாம், கல்யாண செலவுகளையெல்லாம் நானே செய்து கொள்கிறேன். பெண் கிடைத்தால் போதும் என்று ஒரு ஸ்டேமென்ட் விடுவார்கள். இதை முதலிலேயே செய்திருந்தால் வாழ்க்கை அமைதியாக போய் கொண்டிருக்கும். எதை எப்போ செய்யவேண்டுமோ அதை அப்போ செய்யவேண்டும். காலம் கடந்து ஒன்றை செய்வதை விட, சும்மா இருத்தல் மேல். இதை தான் திருவள்ளுவர்
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
என்று சொல்லியுக்கிறார்.
குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த தந்தை. கணேஷ் பீடியின் கடைசி முனையையும் விடாமல் தம் கட்டி, ஆஸ்துமா, பிரசர், என பல வியாதிகள். ..
முடிவுரை
இப்பொழுது வயது நாற்பதை தாண்டி விட்டது. என்ன செய்ய? இன்னும் பெண் கிடைக்கவில்லை. சொட்டை மண்டையுடன், மீதமிருக்கும் நான்கு, ஐந்து மயிரும் வெள்ளையாகிவிட டொக் விழுந்த கன்னங்களுடன், லேசாக கூண் போட்டு, தொப்பை விழுந்து, அடிக்கடி பெருமூச்சு விட்டு சலிப்புடன் ரோட்டில் யாராவது சென்று கொண்டிருந்தால் - ஜாக்கிரதை.. மாமனாரை மொட்டை அடிக்க கையில் அடப்பத்துடன் சுற்றி கொண்டிருந்தவர்கள். இவர்கள் பேராசைக்காரர்கள், பெண்தேடிக் கொண்டிருக்கிறார்கள் ...